எலும்பு பலவீனமடைந்தால், ஆஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்பு மெலிதல் நோய் ஏற்படும். இதனால், எலும்பு முறிவு, கடுமையான மூட்டு வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
பொதுவாகவே எலும்பு திசுக்களின் அடர்த்தி பெண்களுக்கு ஆண்களை விட குறைவாக இருப்பதால், பெண்கள், அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
வயது ஆக ஆக ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் கால்ஷியம் குறைபாடு ஏற்படுகிறது.
மாதவிடாய் நின்ற பிறகு ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோனின் அளவு குறைவதும் எலும்பு பலவீனத்திற்கு ஒரு முக்கிய காரணம்.
எலும்பு பலவீனம் அடையாமல் இருக்க நாம் உண்ணும் உணவில் இருக்கும் கால்சியத்தை உடல் கிரகித்துக் கொள்ள போதுமான அளவு வைட்டமின் டி யும் தேவை.
வைட்டமின் டி யை பெற, காலை சூரியன் ஒளி உடலில் படும்படி உடற்பயிற்சி அல்லது நடை பயிற்சி செய்வது அவசியம்.
எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க கால்சியம் நிறைந்த பால் பால் பொருட்கள், புரோக்கலி, உலர் பழங்கள், கேழ்வரகு, ஆரஞ்சு ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உடலில் இருந்து கால்சியத்தை உறிஞ்சக்கூடிய, சோடா பானங்கள், அதிக சர்க்கரை சேர்த்த இனிப்புகள், அதிக உப்பு, மதுபானம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
காபி டீ அதிகமாக குடிப்பதும் உடலில் உள்ள கால்சியம் சத்தை உறிஞ்சி எலும்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது