நீரிழிவு நோய் இன்றைய காலகட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நோய்களில் ஒன்றாக உள்ளது.
தவறான உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மை காரணமாக, உடலில் இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது.
சில உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கலாம்.
இரவு வெந்தயத்தை ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் அதை கடித்து உட்கொண்டால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த காலையில் பால் மற்றும் சர்க்கரை இல்லாமல் இஞ்சி டீ குடிக்கலாம்
வெறும் வயிற்றில், நெய்யுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி கலந்து சாப்பிட்டால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வெறும் வயிற்றில் ஏதாவது ஒரு வடிவில் ப்ரோடீனை உட்கொள்ள வேண்டும்.
ஓட்ஸில் அதிக அளவு நார்சத்து உள்ளதால், இதை வெறும் வயிற்றில் உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும்.
இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.