தைராய்டு என்பது, கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பி. சிறிய உறுப்பான இது, நம் உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தைராய்டு பிரச்சனைகளுக்கும் வாழ்க்கை முறைக்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பு உள்ளது. இந்நிலையில் தைராய்டு பிரச்சனை தீர கடைபிடிக்க வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
தைராய்டு பிரச்சனை இருந்தால் காஃபின் அதிகம் உட்கொள்வதை தவிர்க்கவும். அளவுக்கு அதிக காஃபின் தைராய்டு பிரச்சனையை தீவிரமாக்கும்.
உடலில் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைக்கும் ப்ரோக்கோலி, காலிஃபிளவர் மற்றும் முட்டைக்கோஸ் போன்றவை காய்கறிகளை தவிர்க்க வேண்டும்.
ஒமேகா-3 அதிகம் உள்ள உணவில் சோயாபீன்ஸ், முட்டை, வால்நட்ஸ் மற்றும் மீன் உணவுகள் தைராய்டை கட்டுப்படுத்த உதவுகிறது.
உடற்பயிற்சி செய்வதால் தைராய்டு சுரப்பி சிறப்பாக செயல்படுவதோடு, உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.