யூரிக் அமில அளவு அதிகமாவதால், மூட்டு வலி, கீல்வாதம், சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சில காய்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பூசணிக்காயில் வைட்டமின் சி, பீடா கரோடின் போன்ற ஆண்டி-ஆக்சிடெண்டுகள் அதிகமாக உள்ளன. இவை யூரிக் அமில அளவை குறைக்க உதவுகின்றன.
ப்ரோக்கோலி யூரிக் அமில அளவை குறைக்க உதவும். இதில் பல வித ஆரோகிய நன்மைகள் உள்ளன. இதில் உள்ள பண்புகள் மூட்டு வலியையும் குறைக்கும்.
நூல்கோலில் ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகள் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இதை முறையாக உட்கொண்டால் யூரிக் அமிலத்தை எளிதாக கட்டுப்படுத்தலாம்.
காளானில் உள்ள பீடா-குளூகென்ஸ் யூரிக் அமில அளவை குறைத்து உடலில் வீக்கத்தையும், மூட்டு வலியையும் குறைக்க உதவுகின்றது.
பீன்ஸ் புரத்தச்சத்தின் களஞ்சியமாக கருதப்படுகின்றது. இது யூரிக் அமில அளவை குறைக்க உதவுகின்றது.
பாலக் கீரையில் பியூரின் அளவு குறைவாக இருக்கும். இது இன்னும் பல வித ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.
இது உடலில் பியூரின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து யூரிக் அமில பிரச்சனையை சீர் செய்கிறது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.