இன்றைய நவீன காலத்தில் நீரிழிவு நோய் பலரிடம் பரவலாக காணப்படுகின்றது.
இரத்த சர்க்கரை அளவு அதிகமானால் அது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு இன்னும் பல நோய்களுக்கும் நுழைவாயிலாக அமைகிறது.
நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் சில விதைகளை பற்றி இங்கே காணலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஆளி விதைகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். இவற்றின் பண்புகள் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும்.
வெந்தயம் சுகர் நோயாளிகளுக்கு அருமருந்தாக பார்க்கப்படுகின்றது. நார்ச்சத்து அதிகம் உள்ள வெந்தயத்தை இரவில் ஊற வைத்து காலையில அதன் நீரை குடித்து வந்தால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும், சுகர் லெவலும் குறையும்.
மெக்னீஷியம் அதிக அளவில் உள்ள பூசணி விதைகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைகக் உதவும்.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த சியா விதைகளை சுகர் நோயாளிகளை உட்கொள்ளலாம்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.