உடலின் ஆரோக்கியமான மற்றும் சீரான செயல்பாட்டிற்கு கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்திருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், அதனால் மாரடைப்பு, இதய கோளாறுகள் போன்ற பல வித உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
கொழுப்பு அதிகமாக இருப்பவர்கள் பருவ கால காய்கறிகளை உட்கொள்ளலாம். காய்கறிகள் மற்றும் பழங்களில் உடலுக்கு தேவையான அனைத்து வித ஊட்டச்சத்துகளும் உள்ளன.
பீன்ஸில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது இந்த பச்சை காயை தினமும் உட்கொள்வது இதயத்திற்கு நன்மை பயக்கும். இது மட்டுமின்றி கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கவும் இது உதவும்.
உடலில் அதிகமாகும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க முளை கட்டிய பயறுகள் மிகவும் உதவியாக. இவற்றில் இருக்கும் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும் உதவும்.
முழு தானியங்களில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதோடு கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும் ஊட்டச்சத்துகளும் உள்ளன. இது அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்
கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும் நோயாளிகள் ராஜ்மாவை அடிக்கடி தங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதய கோளாறுகளை தவிர்க்க உதவும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.