பொதுவாக 40 வயதிற்குப் பிறகு, உங்கள் உடலில் பல மாற்றங்கள் வர ஆரம்பிக்கும். உங்களைப் பிட் ஆக வைத்திருக்க உதவும் சில பழக்கங்களை பின்பற்றூவதால் ஆரோக்கியமாக இருக்கலாம்
40 வயதிற்குப் பிறகு, எலும்புகளின் அடர்த்தி குறையத் தொடங்குகிறது. இது ஆஸ்டியோபோரோசிஸ் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. எலும்பை வலுவாக வைத்திருக்க, கால்சியம், வைட்டமின் டி நிறைந்த உணவை உண்ணவும்.
நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகளை குறைக்க, வாரத்தின் பெரும்பாலான நாட்களில் 30 நிமிட உடற்பயிற்சி செய்யுங்கள்.
வயதுக்கு ஏற்ப உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதால், இது வளர்சிதை மாற்றத்தை குறைந்து, உடல் பருமன் ஏற்படும். இதனை தடுக்க சரிவிகித உணவை உண்ணுங்கள்.
40 வயதாகும்போது, ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவில் மாற்றம் ஏற்படும். எனவே, ஹார்மோன் அளவை பரிசோதிக்கவும்
40 வயதிற்குப் பிறகு சருமத்தின் இறுக்கம் மற்றும் பளபளப்பு குறையத் தொடங்குகிறது. இதற்கு நல்ல தூக்கம், உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு தேவை.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.