வெறும் காலில் நடப்பது

காலையில் எழுந்ததும் பச்சைப் புல்லில் வெறுங்காலுடன் நடப்பது ஆரோக்கியத்திற்கு வியக்கத்தக்க அளவில் நன்மை பயக்கும். அதனை அறிந்தால், நீங்களும் இந்த பழக்கத்தை கடைப்பிடிப்பீர்கள்.

Vidya Gopalakrishnan
Apr 03,2023
';

காலணிகள்

பொதுவாக ஷூ அல்லது விதவிதமான காலணிகளை போட்டுக் கொண்டு நடக்கும்போது ஏற்படும் அனுபவத்திற்கும், பசுமையான புல்லின் மீது நடப்பதற்கும் வித்தியாசம் uஉள்ளது.

';


உடலின் பாகம், பூமியில் நேரடியாக படும் போது உடலின் சமநிலை, ப்ரோபிரியோசெப்சன் மற்றும் உடல் விழிப்புணர்வு ஆகியவற்றில் முன்னேற்றங்களைக் கொடுத்து, வலி நிவாரணத்திற்கு உதவும்.

';

கண்பார்வை

காலையில் எழுந்ததும் புல்லில் வெறுங்காலுடன் நடந்தால் உள்ளங்கால்களில் அழுத்தம் கொடுக்கும். சரியான புள்ளியில் அழுத்தம் இருந்தால், நம் கண்பார்வை கூர்மை நிச்சயமாக அதிகரிக்கும்.

';

நீரிழிவு

புல்லின் மீது நடப்பது டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு தமனி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

';

ஒவ்வாமை

பாதத்தின் கீழ் உள்ள மென்மையான செல்களுடன் தொடர்புடைய நரம்புகளை தூண்டுகிறது . மூளைக்கு சமிக்ஞையை அனுப்புகிறது. இது ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது.

';

தசைகள்

தசைகள் மற்றும் தசைநார்கள் வலுவாக்க வெறும் கால்களில் நடப்பது உதவும். கால் தசைகள் வலுவாவதால் முதுகின் கீழ் பகுதி உறுதியடைகிறது.

';

தூக்கமின்மை

தூக்கமின்மை பிரச்சனையை தீர்க்க பச்சை புல் மீது வெறுங்காலுடன் நடப்பது பயனளிக்கும். தூக்க நேரம் மற்றும் தூக்க சுழற்சியை சரிசெய்யும்.

';

மசாஜ்

புல்லில் நடக்கும்போது, ​​ஒரு சிறந்த கால் மசாஜ் ஆக வேலையை செய்கிறது. கால்களின் தசைகள் நிறைய தளர்வு பெறுகின்றன, இதன் காரணமாக வலி நீங்கி நிவாராணம் கிடைக்கும்.

';

மன அழுத்தம்

காலையில் புல் மீது வெறுங்காலுடன் நடப்பது மனதை ரிலாக்ஸ் செய்து பதற்றத்தை போக்குகிறது. மன அழுத்தத்தை போக்கி நிம்மதியான உணர்வைத் தருகிறது.

';

VIEW ALL

Read Next Story