வாக்கிங் என்பது எளிமையான செயல்பாடாக தோன்றினாலும், நம்ப முடியாத அளவிற்கு ஆரோக்கிய நலன்களை தரக்கூடிய ஒரு சிறந்த உடற்பயிற்சி. நோயற்ற வாழ்வுக்கு தினமும் 8,000 அடிகள் நடந்தாலே போதும்.
நடைபயிற்சி சிறந்த கார்டியோ உடற்பயிற்சிகளில் ஒன்றாகவும், இதய நோய்களைத் தடுப்பதற்கான எளிதான வழிகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
நடைபயிற்சி மேற்கொள்வது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு, மன அழுத்தத்தை போக்கும் அருமருந்தாக உள்ளது.
உடல் பருமனை குறைக்க வாக்கிங் பெரிதும் உதவும். தினசரி நடை பயிற்சி செய்வதன் மூலமாக பசியை கட்டுப்படுத்த முடியும்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள், தினமும் நடைபயிற்சியை மேற்கொண்டால், ரத்த சர்க்கரை அளவு மிகவும் சீராக இருக்கும்.
இரவில் தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்படுபவர் என்றால், நடைபயிற்சி நல்ல பலனைத் தரும்.
எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.