ஆலிவ் எண்ணெய் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் பல நோய்களை தவிர்க்கலாம் என்பது பலருக்கும் தெரியாது.
ஆலிவ் எண்ணெய்யில் வைட்டமின்-ஈ, வைட்டமின் கே, இரும்புச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
ஆலிவ் எண்ணெய் நினைவாற்றலை அதிகரிக்கவும், மூளையை சுறுசுறுபாக்கவும் உதவும். ஆலிவ் எண்ணெயை உட்கொள்வது அல்சைமர் அபாயத்தைக் குறைக்கும்.
பி-கரோட்டின் ஆலிவ் எண்ணெயை தொடர்ந்து உட்கொள்வது புற்றுநோய் போன்ற கொடிய நோய்களின் அபாயத்தை குறைக்கும்.
ஆலிவ் எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அதிகம் காணப்படுவதால் வயிற்றுப் பிரச்சனைகளை நீக்கும்.
ஆலிவ் எண்ணெயில் பாலிபினால்கள் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
ஆலிவ் எண்ணெய் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். இதனை தொடர்ந்து அருந்தி வர, பல பருவகால நோய்களிலிருந்தும தப்பிக்கலாம்.
ஆலிவ் எண்ணெயில் கால்சியம் அதிகம் உள்ளதால், இது ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனையில் உங்களுக்கு நிவாரணம் தரும்.
ஆக்ஸிஜனேற்றம், வைட்டமின் ஈ பண்புகள் ஆலிவ் எண்ணெயில் காணப்படுகின்றன. இது சருமத்தில் உள்ள சுருக்கங்கள், முகப்பரு மற்றும் வறட்சியை நீக்குகிறது.
கேசத்தை மிளிரச் செய்யும் ஆலிவ் எண்ணெய் தலைமுடியையும் வலுவாக்குகிறது.
ஆலிவ் எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு இரைப்பை குடல் மற்றும் வயிறு பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. இதனை பயன்படுத்துவதால், மலச்சிக்கல் பிரச்சனையும் தீரும்.