கோடை சீசனில் மாம்பழத்திற்கு அதிக மவுசு உள்ளது. சிலருக்கு மாம்பழச்சாறு அருந்துவது பிடிக்கும், சிலருக்கு அப்படியே வெட்டி சாப்பிட பிடிக்கும்.
ஆனால் அதன் கொட்டையயை யாரும் விரும்புவதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாம்பழ விதைகளை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்.
மாங்கொட்டை பொடி செய்து தினமும் மூன்று வேளை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும்.
மாங்கொட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதனுடன் இதனை உட்கொள்வதால் இரத்த ஓட்டம் மேம்படும்.
மாங்கொட்டை சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. இதன் காரணமாக மாரடைப்பு அபாயம் குறைகிறது.
மாங்கொட்டை உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது. இதனால் சருமம் மேம்படும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.