புரதச்சத்து நிறைந்த முட்டை இயற்கையான கண்டிஷனர்களாக செயல்படுவதால் முடியை மென்மையாக்குகிறது.
வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை முட்டையை முடிக்கு பயன்படுத்துவது முடி வளர்ச்சிக்கு உதவும்.
பலரும் தினசரி பயன்படுத்தி வரும் தேங்காய் எண்ணெய் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும்.
தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சேர்த்து முடிக்கு தடவினால், முடியின் வலிமை அதிகரித்து, சரியான வளர்ச்சிக்கு உதவுகிறது.
ஆலிவ் எண்ணெய் தலைமுடிக்கு இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது மற்றும் உலர்ந்த முடியை மென்மையாக்க உதவுகிறது.
ஆலிவ் எண்ணெய் முடியை மென்மையாக்கும் மற்றும் உலர்ந்த உச்சந்தலைப் பகுதிகளை ஈரப்பதமாக்குகிறது.
கற்றாழை தோல் மற்றும் முடி இரண்டிற்கும் பல நன்மைகளை கொண்டுள்ளது. இது முடியை வலுப்படுத்தவும் அடர்த்தியாகவும் மாற்ற உதவும்.
நெல்லிக்காய் முடி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ள தீர்வாக கருதப்படுகிறது. இது மயிர்க்கால்களை பலப்படுத்துகிறது.
அதிக ரசாயனங்களின் பயன்பாடு முடியின் தரம், முடி சேதம் மற்றும் முடி உதிர்தல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. முடி வளர்ச்சியை அதிகரிக்க இயற்கையான முறைகளை தேர்வு செய்வது நல்லது.