உடலுடன் மூளையையும் சுறுசுறுப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியம். உங்கள் மனதையும் மூளையையும் கூர்மையாக்கும் சில பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்...
உங்கள் மனதை ஒருமுகப்படுத்த, தியானம் செய்வதே பயனுள்ள பயிற்சி. இதற்காக, நீங்கள் அதிகாலையில் எழுந்து யோகா அல்லது தியானத்தை தொடர்ந்து பயிற்சி செய்யவதன் மூலம் மூளை சுறுசுறுப்பாக செயல்படும்
உங்கள் மனதை கூர்மைப்படுத்த விரும்பினால், இதற்கு நடனம் அல்லது இசை உதவும். பாட்டு, இசைக்கருவி போன்றவற்றை கற்றுக் கொள்வதால் நுணுக்கங்கள் பற்றிய புரிதல் வரும்.
உடலில் எண்டோர்பின்களை வெளியிடுவதன் மூலம் விளையாட்டு இயல்பாகவே மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. பிடித்த ஒரு விளையாட்டை தினமும் விளையாடுவது ஐக்யூவை அதிகரிக்க செய்யும்.
மூளை வளர்ச்சி சிறப்பாக இருக்க, தயிர், பாதம், வாதுமை பருப்பு, மீன் உணவுகள், போன்ற மூளைக்கான உணவுகள் கொடுப்பது மிக முக்கியம்
உங்கள் மனதையும் உடலையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க, நீங்கள் சத்தான உணவு, போதுமான தூக்கம் மற்றும் தொடர்ச்சியான உடற்பயிற்சியை பின்பற்ற வேண்டும்.
எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.