இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்து உடல் எடையையும் குறைக்க உதவும் சில ஆரோக்கியமான பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
கொய்யாப்பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு மிக ஏற்றதாக கருதப்படுகின்றது. இது இரத்த சர்க்கரை அளவை குறைப்பதுடன் உடல் எடையையும் குறைக்கின்றது.
வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள அரஞ்சு பழத்தில் கலோரி அளவு மிக குறைவாக உள்ளது. இவை எடையை குறைக்க உதவுவதுடன் இரத்த சர்க்கரை அளவுகளையும் குறைக்க உதவுகின்றன.
இந்த பழத்தில் நார்ச்சத்து, ஓலிக் ஆசிட் ஆகியவை உள்ளன. இவை செரிமானத்தை சீராக்கவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், எடை இழப்பை வேகப்படுத்தவும் உதவும்.
சர்க்கரை அளவு குறைவாக உள்ள கிரேப் ஃப்ரூட்டில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் ஆசிட் உள்ளன. இவை செரிமானத்தை சீராக்கவும் உடல் பருமனை குறைக்கவும் உதவுகின்றன.
கிவி பழத்தில் சர்க்கரை அளவு குறைவாகவும் வைட்டமின் சி அதிகமாகவும் உள்ளது. வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுவதால் இவை எடை இழப்புக்கு மிகவும் உதவுகின்றன.
ஸ்ட்ராபெர்ரியில் நார்ச்சத்து அதிகமாகவும், சர்க்கரை அளவு குறைவாகவும் உள்ளது. இந்த பழம் தொப்பை கொழுப்பை குறைக்கவும் உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றன.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.