சமையலுக்கு சுவையும் மணமும் சேர்க்க தாளிக்கும் போது சேர்க்கப்படும் கறிவேப்பிலையின் வியக்கத்தக்க ஆரோக்கிய நலன்கள் பலருக்கு தெரிவிவதில்லை.
கறிவேப்பிலை என்னும் மூலிகையின் அருமை தெரியாமல், உணவு சாப்பிடும் போது பலரும் தாளிப்பில் சேர்க்கபட்ட கறிவ்வேப்பிலையை தூக்கி எறிந்துவிடுவார்கள்.
கறிவேப்பிலையில் இருக்கும் `கார்பஸோல்’ ஆல்கலாய்டுகள், செல்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் ஃப்ரீ- ரேடிக்கல்களை அழித்து இளமையாக வைத்துக் கொள்ளும்.
உடல் பருமன் குறைய தினமும் காலையில் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலைகளை உட்கொண்டு வர, நல்ல மாற்றத்தைக் காணலாம்.
சர்க்கரை நோய்க்கு எதிராகச் செயல்படும் ஆற்றல் கறிவேப்பிலைக்கு இருப்பதாக ஆய்வுகள் பல தெரிவிக்கின்றன.
உடலில் சேரும் அதிகப்படியான கெட்ட கொழுப்புகளை வெளியேற்றவும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் கறிவேப்பிலை உதவுகிறது.
கார்பாஸோல் ஆல்கலாய்டுகள் கறிவேப்பிலையில் அதிகமாக இருப்பதால், வயிற்றில் உண்டாகும் கோளாறு அனைத்தையும் குணப்படுத்துகிறது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கறிவேப்பிலை உதவுகிறது.
கறிவேப்பிலையில் இருக்கும் வைட்ட மின் ஏ கண்களை பாதுகாத்து, கரோட்டினாய்டு பாதிப்பு வராமல் தடுக்கும்.
சிறுநீரக பிரச்சனைகள் கறிவேப்பிலை ஜூஸ் உடன் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து பருகி வந்தால், சிறுநீரக சம்பந்தமான பிரச்சனைகள் குணமாகும்.
மலச்சிக்கல் தீர சிறிது கறிவேப்பிலையை வெயில் நிழலில் உலர்த்தி, பொடி செய்து, தேன் கலந்து சாப்பிட வேண்டும்.
இரத்த சோகை கொண்டவர்கள், உலர்ந்த கறிவேப்பிலையை தொடர்ந்து சேர்த்து வர, விரைவில் சரியாகும்.