ஊட்டச்சத்துக்களின் பவர் ஹவுஸ் என்று அழைக்கப்படும் முருங்கை இலையில் அத்தியாவசியமான வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிரம்பியுள்ளன
முருங்கை இலையில் ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் நிரம்பியுள்ளதால், செல்கள் சேதம் அடைவது தடுக்கப்பட்டு, ஆபத்தான நோய்களின் ஆபத்து பெருமளவு குறைகிறது.
வீக்கத்தை குறைக்கும் பண்பு கொண்ட முருங்கை இலைகள், மூட்டு வலி, கீல்வாதம் போன்றவற்றை குணப்படுத்துகிறது.
ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் ஆற்றல் முருங்கை இலைக்கு உண்டு என்பது பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முருங்கை இலை மிகவும் உதவும்.
பாலூட்டும் தாய்மார்கள், தாய்ப்பால் பெருக முருங்கை இலையை தினமும் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்ட முருங்கை இலை, கூந்தலையும் சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்து, இளமையாக இருக்கு உதவுகிறது.
மலமிளக்கியாக செயல்படும் முருங்கை இலைகள், மலச்சிக்கல் மட்டுமல்லாது செரிமானம் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு தீர்வு ஆகிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.