திடீரென அதிகரிக்கும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் சில உணவுகளை பற்றி இங்கே காணலாம்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் தயிர் உதவுகிறது. மேலும் இதில் உள்ள ப்ரோபயோடிக் பாக்டீரியா கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதோடு வீக்கத்தையும் குறைக்கிறது.
டைப் 2 நீரிழிவு நோயாளிகள் தினமும் 2-3 முட்டைகளை கண்டிப்பாக உட்கொள்ளலாம். முட்டை சர்க்கரை அளவை குறைத்து கொலஸ்ட்ராலையும் கட்டுக்குள் வைக்கிறது
பருப்பு வகைகளில் ஆரோக்கிய நன்மைகள் அதிகமாக உள்ளன. டைப் 2 நீரிழிவு நோயாளிகள் அதிக அளவில் இவற்றை உட்கொள்ள வேண்டும். இவற்றின் கிளைசிமிக் குறியீடும் குறைவாக உள்ளது
பல வித மருத்துவ குணங்களைக் கொண்ட மஞ்சள் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. காலையில் மஞ்சள் பால் குடிப்பதும், சமையலில் இதை பயன்படுத்துவதும் மிக நல்லது
வெறும் வயிற்றிலோ அல்லது ஒரு கிளாஸ் நீருடனோ பூண்டை உட்கொண்டால் சர்க்கரை அளவு உடனடியாக கட்டப்படும். இது கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்படுத்தும்.
சரியான முறையில் இலவங்கப்பட்டையை உட்கொண்டால் நீரிழிவு நோயை எளிதாக கட்டுப்படுத்தலாம். இதன் மூலம் எடை இழப்பிலும் உதவி கிடைக்கும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.