யூரிக் அமிலம் உடலில் அதிகமானால் அது மூட்டு வலி உட்பட பல வித உடல் உபாதைகளை அதிகரிக்கின்றது.
யூரிக் அமில நோயாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இனிப்புகள் உடலில் யூரிக் அமில அளவை அதிகரிக்கின்றன. இதில் உள்ள ஃப்ருக்டோஸ் இதற்கு காரணமாகின்றன. ஆகையால் யூரிக் அமில நோயாளிகள் இனிப்புகளை தவிர்ப்பது நல்லது.
மதுபானத்தில் ப்யூரின் உள்ளது. ஆகையால் இதை உட்கொள்வது உடலில் யூரிக் அமில அளவை அதிகரிக்கின்றது.
யூரிக் அமில நோயாளிகள் புளிப்பு சுவையுள்ள பழங்களை உட்கொள்வதை குறைக்க வேண்டும். இவை யூரிக் அமில அளவை அதிகரிக்கின்றன.
சிக்கன் உட்கொள்வதால் இரத்தத்தில் யூரிக் அமில அளவு அதிகரிக்கின்றது. இது உடலில் உள்ள வீக்கங்களையும் அதிகரிக்கின்றது.
காலிஃப்ளவர், பட்டாணி, பாலக் கீரை, காளான் போன்ற காய்களை யூரிக் அமில நோயாளிகள் தவிர்க்க வேண்டும். இவை யூரிக் அமில அளவை அதிகரிக்கின்றன.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.