சிறுநீரகம் ஒரு பில்டராக நம் உடலில் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. சிறுநீரக ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்படாவிட்டால், அதன் செயலிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உடலில் நச்சுக்கள் அதிகரிக்கும்.
சிறுநீரகத்தை நச்சில்லாமல் வைத்திருக்க செய்தாலே சிறுநீரகம் உடலில் நச்சு இல்லாமல் வைத்திருக்க உதவும்.
பொதுவாக நாம் போதுமான அளவு திரவத்தை எடுத்துகொள்ளும் போது சிறுநீரகங்கள் தங்களை தாங்களே சுத்தப்படுத்துகின்றன. சிறுநீரக செயல்பாடு மேம்பட அதிக தண்ணீர் குடிப்பது அவசியம்.
மாதுளையில் காணப்படும் பொட்டாசியம் சிறுநீரக கற்களின் அபாயத்தைக் குறைக்கவும், சிறுநீரகத்திலிருந்து நச்சுகள் மற்றும் கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது.
சிவப்பு திராட்சையில் பிளவனாய்டுகள் உள்ளன. இவற்றில் உள்ள ரெஸ்வெராட்ரோல் என்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் சிறுநீரக வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் சிட்ரிக் அமிலம் சிறுநீரக கற்களை கரைக்கவும், நச்சுகளை அகற்றவும் உதவுகிறது
காலையில் 5-6 இடித்த பூண்டு பற்களை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து தண்ணீர் சூடாகியதும் குடிப்பது சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையை வசுத்தப்படுத்த உதவுகிறது.
ஆரஞ்சு மற்றும் லெமன் போன்ற பழங்களில் வைட்டமின் சி காணப்படுகிறது. இது சிறுநீரக கற்களை நீக்க உதவுகிறது. கால்சியத்துடன் பிணைந்து கால்சியம் கற்கள் உருவாகுவதை தடுக்கிறது.
மஞ்சள் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சியை தடுத்து சிறுநீரகங்களை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.
பீட்ரூட் ஜூஸில் பீடைன் என்ற கலவை காணப்படுகிறது. இது சிறுநீரின் அமிலத் தன்மையை அதிகரிக்க உதவுகிறது. இது சிறுநீரக கற்கள் உருவாகுவதை தடுக்கிறது.
இஞ்சி சிறுநீரகத்தின் கனிம படிவுகளை குறைக்கிறது. பச்சை இஞ்சி அல்லது 2-3 கப் இஞ்சி தேநீர் பயன்படுத்துவது சிறுநீரகத்தை சுத்தப்படுத்த ஒரு சிறந்த வழியாகும்.
கிட்னி பீன்ஸ் எனப்படும் ராஜ்மா சிறுநீரக ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தத். இது நச்சுகளை நீக்கும்.
சரியான தூக்கம் இல்லாமல் மன அழுத்தத்தில் இருப்பது சிறுநீரக செயல்பாட்டையும், வேலைப்பளுவையும் அதிகரிக்கிறது.