குடல் ஆரோக்கியத்திற்கும் மனநிலைக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவே புரோபயாடிக் நிறைந்த உணவுகள் கவலை போக்க பயனுள்ளதாக இருக்கும்.
மஞ்சளில் உள்ள குர்குமின் உகவலை மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்க உதவும். இது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது.
நட்ஸ்களில் பதட்டத்தைக் குறைத்து நிம்மதியை கொடுக்கும் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் மெக்னீசியம் அதிகம் உள்ளது.
கெமோமில் தேநீரில் டென்ஷன் கவலைகளை போக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் கலவைகள் உள்ளன
கீரைகளில் மெக்னீசியம் அதிகம் உள்ளது. மெக்னீசியம் குறைபாடு மன அழுத்தம் மற்றும் கவலையை ஏற்படுத்தக் கூடியது. கீரைகள் கவலையை போக்கி நன்மை பயக்கும்.
சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் மன பதற்றத்தையும் கவலைகளையும் போக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.
பெர்ரிகளில் மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடவும் பதட்டத்தைக் குறைக்கவும் உதவும் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் சி நிரம்பியுள்ளது.
இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.