நம் உடலின் சுத்திகரிப்பு ஃபேக்டரி என அழைக்கப்படும் கல்லீரல், உடலின் மிகப் பெரிய மிக முக்கிய உறுப்பு.
கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டால், அது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். சில உணவுகள் கல்லீரலை வலுப்படுத்த உதவும்.
வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய், கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கி டீடாக்ஸ் செய்கிறது
கீரை வகைகள் மற்றும் பிற பச்சை இலை காய்கறிகளில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள், கல்லீரலை சேதத்தில் இருந்து பாதுகாக்கின்றன.
ஆப்பிள், திராட்சை மற்றும் பெர்ரி பழங்கள் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை.
மீன் உணவுகள் குறிப்பாக, ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த சால்மன் வகை மீன்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை தரும் அருமருந்து.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.