குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடு என்பது அவர்களது உடல் நலத்தில் மட்டுமல்ல, மன நலனையும் பாதிக்கும்
பாலில் உள்ள கால்சியம் மற்றும் புரோட்டீன் குழந்தைகளின் எலும்புகள் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில், குழந்தையின் உயரத்தை அதிகரிக்க உதவும் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
இரும்பு, மெக்னீசியம், நார்ச்சத்து, ஃபோலேட், பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் ஏ நிறைந்த பச்சை இலை காய்கறிகள், குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க உதவும்.
பருவ கால பழங்களை தவறாமல் சேர்ப்பதால், வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைபாடு ஏற்படும் வாய்ப்பே இல்லை.
புரதத்தின் வளமான ஆதாரமான முட்டைகளை தினமும் கொடுக்க வேண்டும். குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியம்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.