யூரிக் அமிலம் இரத்தத்தில் காணப்படும் ஒரு கழிவுப் பொருளாகும். பியூரின்கள் எனப்படும் ரசாயனங்களை உடல் உடைக்கும்போது இது உருவாகிறது.
உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால், எலும்புகள் படிப்படியாக பலவீனமடையத் தொடங்குகின்றன. கால்களில் வீக்கமும், விறைப்பும் ஏற்பட்டு, நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
வாழைப்பழங்களில் பியூரின்கள் குறைவாக உள்ளதோடு, வைட்டமின் சி நிரம்பியுள்ளன. கீல்வாதத்தால் பாதிக்கப்படும் போது சாப்பிட சிறந்த உணவாக அமைகிறது.
உடலில் நீர்ச்சத்து குறைந்தாலும் உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்க செய்யலாம்.எனவே தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
ஆப்பிள் பழங்கள் இயற்கையாகவே யூரிக் அமிலத்தை குறைக்கும். இதில் உள்ள நார்சத்து இரத்தத்தில் இருந்து யூரிக் அமிலத்தை உறிஞ்சி, இரத்தத்தில் உள்ள அதிகப்படியான அளவை நீக்குகிறது.
மஞ்சளில் முக்கிய உயிரியக்க கலவையான 'குர்குமின்' பல்வேறு சிகிச்சைக்கு ஆதாரமாக உள்ள நிலையில் யூரிக் அமில அளவை குறைக்கிறது.
செர்ரிகளில் அந்தோசயினின்கள் நிரம்பியுள்ளதால், அவை யூரிக் அமில அளவைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உடல் யூரிக் அமிலத்தை அதிகம் வெளியேற்ற காபி உதவும். உடலில் உள்ள பியூரின்களை உடைக்கும் நொதியுடன் போட்டியிடுவதற்கு காபி சிறந்தது.
எலுமிச்சை யூரிக் அமிலத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நல்லது. அதிக யூரிக் அமில அளவு உள்ளவர்களுக்கு கீல்வாதத்தைத் தடுக்க எலுமிச்சை சாறு உதவும்.