நம்மில் பலர் இதயம் நுரையீரல் போன்றவற்றுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை கல்லீரலுக்கு கொடுப்பதில்லை.
சிரோசிஸ், கொழுப்பு கல்லீரல் நோய் போன்ற நோய்கள் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறியாவிட்டால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
பதப்படுத்தப்பட்ட உணவு, குறிப்பாக ரொட்டி, பீட்சா மற்றும் பாஸ்தா போன்ற பொருட்களும் உங்கள் கல்லீரலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
சிவப்பு இறைச்சி, மாட்டிறைச்சியில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் உள்ள நிலையில், அது கல்லீரலுக்கு மிகவும் ஆபத்தானது.
பால் பொருளான வெண்ணையில் அதிக அளவு நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. எனவே அளவோடு உட்கொள்வது நல்லது.
உப்பில் சோடியம் அதிகம் உள்ள நிலையில், அதிக உப்பை சாப்பிடுவதும் கல்லீரலை சேதப்படுத்தும்.
கோதுமையிலிருந்து மைதா மாவு தயாரிக்கும் போது, அதிலிருந்து புரதம் பிரித்தெடுக்கப்படுகிறது, அதன் காரணமாக அது அமிலமாகிறது. இது கல்லீரலுக்கு கேடு
பொரித்த உணவு பொருட்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். இது கல்லீரலுக்கு பெரும் கேடு விளைவிக்கும்
சர்க்கரையில் உள்ள பிரக்டோஸ் காரணமாக கல்லீரலில் கொழுப்பு சேரத் தொடங்குகிறது. அதாவது, அதிக சர்க்கரை உணவுகளால், கல்லீரல் கொழுப்பாக மாறத் தொடங்குகிறது