சுவாசத்திற்கு ஆதாரமான நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க, அதில் சேரும் நச்சுக்களை நீக்கும் திறன் பெற்ற உணவுகளை அறிந்து கொள்ளலாம்.
வெல்லம் நுரையீரலை உள்ளே இருந்து சுத்தம் செய்யக்கூடியது. நுரையீரலில் சிக்கிக்கொள்ளக் கூடிய கார்பன் துகள்களை அகறும் திறன் இதற்கு உள்ளது.
கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளதால் நுரையீரலில் சேரும் நச்சுக்களை நீக்கி, வீக்கத்தை குறைத்து வலுவாக்குகிறது.
ப்ரோக்கோலி ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் நுரையீரலில் ஏற்படும் சேதத்தை தடுப்பதோடு, நச்சுக்களையும் நீக்குகிறது
பீட்ரூட்டில் உள்ள பைட்டோ கெமிக்கல்ஸ், நைட்ரேட் சத்துக்கள் மற்றும் சேர்மங்கள் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் நுரையீரலில் சேரும் நச்சுக்களை நீக்குவதோடு ஏற்படும் திசு சேதத்தை தடுக்க உதவுகிறது.
ஆப்பிளில் உள்ள பினோலிக் கலவைகள் மற்றும் பிளவனாய்டுகள் சுவாச பாதையில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கின்றன.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.