கல்லீரல் உடலில் புரதங்கள், கொலஸ்ட்ரால் மற்றும் பித்த உற்பத்தி முதல் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை சேமித்து வைப்பது வரை பல முக்கிய செயல்பாடுகளைச் செய்யும் ஆற்றல் மிக்க உறுப்பு.
ஆரோக்கியமான கல்லீரல் சிறந்த ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. சில தவறான பழக்க வழக்கங்களால் கொழுப்பு கல்லீரல் பிரச்சனை ஏற்படலாம்.
அதிக கலோரி உணவுகள், நிறைவுற்ற கொழுப்பு கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள், பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளில் இருந்து விலகி இருங்கள்.
நிறைவுற்ற கொழுப்புகளை சாப்பிடுவது கொழுப்பு கல்லீரல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
ரெடி டு ஈட் உணவுகளை உட்கொள்வது கொழுப்பு கல்லீரல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்
கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை தவிர்க்க விரும்பினால், மது அருந்த வேண்டாம். அதிக ஆல்கஹால் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்பு கல்லீரல் பிரச்சினை அதிகமாக ஏற்படுகிறது.
கேக், இனிப்புகள் போன்ற அதிக சர்க்கரை உள்ள உணவுகள் அதிகமாக சாப்பிட்டால், கொழுப்பு கல்லீரல் பிரச்சனை ஏற்படலாம்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.