இன்றைய மோசமான வாழ்க்கை முறை காரணமாக சிறு வயதியிலேயே சோர்வு, உடல்வலி, எலும்பு பலவீனம் போன்றவை ஏற்படுகிறது.
இதற்கு ஊட்டச்சத்து குறைபாடு முக்கிய காரணமாக அமைகிறது. அதிக துரித உணவு உடலை மோசமாக்குகிறது.
கடைகளில் சாப்பிடும் உணவு பசியை போகுமே தவிர, ஆரோக்கியத்திற்கு என்ன நன்மையும் வழங்காது.
உங்கள் உடலையும் எலும்புகளையும் வலுவாக வைத்திருக்க சத்தான உணவு எடுத்து கொள்ள வேண்டும்.
அத்திப்பழத்தில் புரோட்டீன்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
அத்திப்பழம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் இதயம் தொடர்பான நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
அத்திப்பழத்தில் உள்ள தாதுக்கள் வலுவான எலும்புகளை பெற மிகவும் அவசியமானவை.
அத்திப்பழத்தில் அதிக நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.