பண்டிகை காலத்தில் சுகர் அளவு அதிகரிக்காமல் இருக்க சுகர் நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை பற்றி இங்கே காணலாம்.
பண்டிகை காலத்தில் நாம் பல வேலைகளில் பிசியாக இருந்தாலும், தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை மறக்கக்கூடாது.
இனிப்புகளை அதிகம் உட்கொள்ளாமல் இருப்பது நல்லது. அல்லது, சுகர்-ஃப்ரே அல்லது பழங்கள் சார்ந்த இனிப்புகளை உட்கொள்ளலாம்.
இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டவுடன் நடப்பது நல்லது.
முழு தானியங்கள், லெக்யூம்ஸ், பச்சை இலை காய்கறிகள் போன்ற குறைந்த க்ளைசெமிக் குறியீடு உள்ள காய்களை உட்கொள்ள வேண்டும்.
இரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்காமல் இருக்க, காலை, மதியம் மற்றும் இரவில் நார்சத்து, புரதச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் அடங்கிய சமச்சீர் உணவை உட்கொள்ள வேண்டும்.
அவ்வப்போது சுகர் நோயாளிகள் தங்கள் சுகர் லெவலை பரிசோதித்து, அதற்கு ஏற்றவாறு செயலப்டுவது நல்லது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.