கண்களை ஆரோக்கியமாகவும், உங்கள் பார்வையை கூர்மையாகவும் வைத்திருக்க என்னென்ன சத்துக்கள் தேவை? தெரிந்துக் கொள்வோம்
வைட்டமின் ஈ அதிகமாக உள்ள பாதம் பருப்பு, கண்புரை மற்றும் பிற கண் நோய்களைத் தடுக்க உதவும்
பீட்டா கரோட்டீன், வைட்டமின் ஏ போன்ற சத்துகள் கொண்ட சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கண் அலற்சி, மாலைக்கண் நோய் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும்
துத்தநாகம், வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள், கரோட்டினாய்டுகள் உள்ள ப்ரகோலி, கண்புரை வளரும் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன மற்றும் மாலைக்கண் நோய் ஏற்படுவதை தடுக்கிறது
ஆரோக்கியமான கண்களுக்கு, வேகவைத்த முட்டை போன்ற உணவுகளை உணவில் சேர்க்க வேண்டும். இதிலுள்ள வைட்டமின் டி மாகுலர் சிதைவைத் தடுக்க உதவுகிறது. மேலும், வேகவைத்த முட்டை கண்புரை அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
புற ஊதா கதிர்வீச்சிலிருந்து கண்களைப் பாதுகாக்க உதவும் லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் ஆகிய இரண்டு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இலை காய்கறிகளீல் ஏராளமாக உள்ளன.
டார்க் சாக்லேட்டுகளில் அதிக கோகோ இருப்பதால், அதில் ஃபிளாவனால்கள் நிறைந்துள்ளன. இரத்த நாளங்களின் ஓட்டத்தை அதிகரித்து . விழித்திரையை பாதுகாக்கிறது. இரத்த ஓட்டம் சரியாக இருந்தால் தான், நமது கண்கள் சிறந்த முறையில் செயல்பட முடியும்
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொண்ட ப்ளூபெர்ரி, பார்வையை மேம்படுத்தவும் கண் சோர்வை குறைக்கவும் சிறந்தது
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை