300 pg/mLக்கு மேல் வைட்டமின் B12 அளவு சாதாரணம். ஆனால் வைட்டமின் B12 இன் அளவு 200 pg/mL க்கும் கீழே குறையும் போது, கடுமையான பிரச்சனைகள் எழ ஆரம்பிக்கும்.
நன்றாக தூங்கி எழுந்த பிறகும் சோர்வாக உணர்ந்தால், அது உடலில் வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.
உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது உடல் பலவீனமாக இருக்கும். ஆனால் அடிக்கடி பலவீனமாக இருப்பதை உணர்ந்தால் அவை வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.
திடீரென்று அதிகமாக மறதி ஏற்படத் தொடங்கினால், உடலில் வைட்டமின் பி12 அளவு தேவைக்கு குறைவாக உள்ளது என்றாகும்.
கை, கால்களில் அடிக்கடி உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு ஏற்பட்டால் அவை வைட்டமின் பி12 இந் குறைப்பாடாக இருக்கலாம்.
உடலில் வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக, வாய் புண் பிரச்சனையும் ஏற்படலாம். இதனுடன், நாக்கில் வீக்கம் மற்றும் சிவப்பு புள்ளிகள் காணப்படலாம்.
நடக்கும்போது திடீரென தடுமாறினால், உடலில் வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக இருக்கலாம்.