மஞ்சள் ஒரு மருத்துவ மூலிகை. அதிசய மசாலா என அழைக்கப்படும் மஞ்சள், பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.
இருப்பினும், சில குறிப்பிட்ட பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சளை உட்கொள்வதால், பிரச்சனைகள் அதிகரிப்பதோடு, பக்கவிளைவுகளும் ஏற்படும்.
பித்தப்பையில் கல் உள்ள நோயாளிகள் மஞ்சளை உட்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
சிறுநீரக கல் பிரச்சனையினால் பாதிக்கப்படுபவர்கள், மஞ்சளை உட்கொள்வதால், இந்த பிரச்சனையை தீவிரபடுத்தும்.
மஞ்சளில் இருக்கும் ஆக்சலேட்டுகள் கால்சியத்துடன் இணைந்து கால்சியம் ஆக்சலேட் உருவாக்கும் என்பதால் சிறுநீரக கற்கள் பிரச்சனை தீவிரமடையும்.
இரும்புச்சத்து குறைபாடு இருப்பவர்கள் மஞ்சள் அதிகமாக சேர்க்கும் போது அது சத்து குறைபாட்டை அதிகரிக்க செய்துவிடவும் வாய்ப்புண்டு.
மஞ்சள் இரைப்பையில் அமில சுரப்பை அதிகரிக்க செய்கிறது. இதனால் அதனை அதிகளவில் உட்கொள்வது வயிற்று பிடிப்பு, வயிற்று வலியை ஏற்படுத்தும்.
மஞ்சளில் காணப்படும் குர்குமின் வயிற்று மற்றும் குடல் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மஞ்சள் இரத்தப் போக்கு பிரச்சனை அதிகரிக்கிறது. திடீரென மூக்கில் அல்லது மற்ற பாகங்களில் இருந்து ரத்தம் வெளியேறும் பிரச்சனை உள்ளவர்கள், மஞ்சளை உட்கொள்வதை குறைக்க வேண்டும்.
மஞ்சள் காமாலை நோயாளிகளும் மஞ்சள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நோயிலிருந்து மீண்ட பிறகும், மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே மஞ்சள் உட்கொள்ள வேண்டும்.