உடல் பருமன் தான் பல்வேறு நோய்களுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. உடல் எடையை குறைக்க, சில பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பது, சிறப்பான பலன்களை கொடுக்கும்.
உடல் எடையை குறைக்க புரோட்டீன் நிறைந்த முட்டைகள், சோயா உணவுகள், மட்டுமல்லாது நார்ச்சத்து நிறைந்த உணவுகளும் அவசியம்.
உங்களால் முடிந்த அளவு உடற்பயிற்சியை வாரத்திற்கு ஐந்து நாட்களாவது கடைபிடிக்க வேண்டும்.
உணவை தவிர்ப்பதால் நம்மை அறியாமலேயே நிறைய சாப்பிட்டு விடுவோம். இதை தவிர்க்க, நேரத்திற்கு ஒருமுறை சிறிய அளவில் ஆரோக்கியமான உணவு உண்பது பலன் கொடுக்கும்.
உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றவும், உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கவும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிக முக்கியம்.
மன அழுத்தம் அல்லது பதற்றம் இருந்தால் உடல் எடை குறையாது. எனவே தியானம் போன்றவற்றை கடைபிடிப்பது பலன் தரும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.