நாள் பட்ட நெஞ்சு சளியை நீக்குவது கடினம். ஆரம்பத்திலேயே நெஞ்சு சளிக்கு சிகிச்சை அளித்தால், வீட்டு வைத்தியம் மூலம் சுலபமாக நீக்கி விடலாம்.
நெல்லிக்காய் சாறில் மிளகுத் தூள் மற்றும் தேன் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளி, மூக்கடைப்பு நீங்கும்.
புதினா இலை, மிளகு இரண்டையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல் போன்ற நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.
தேங்காய் எண்ணெய் சூடுபடுத்தி அதில் கற்பூரம் சேர்த்து, அந்த எண்ணையை நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும்.
எலுமிச்சை சாரை சுடு நீரில் விட்டு கலந்து, அதில் தேன் சிறிது சேர்த்து கலக்கி குடித்தால் நெஞ்சு சளி கரையும்.
மிளகுத் தூளையும், மஞ்சளையும் பாலுடன் கலந்து ஒரு வாரம் குடித்து வந்தால் நெஞ்சு சளி கரையும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.