ஒற்றைத் தலைவலியில் தலைவலியுடம் கூடவே, வாந்தியும், சத்தம் அல்லது வெளிச்சத்தை தாங்க இயலாத உணர்வும் ஏற்படும்.
மென்மையாக தலையிலும் நெற்றியிலும் மசாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகி தலைவலியில் இருந்து விடுபடலாம்.
லாவண்டர் ஆயில் அல்லது வேறு சில வாசனை எண்ணெய் கலந்த சூடு நீரை முகர்வது சிறந்த நிவாரணம் கொடுக்கும்.
எலுமிச்சம் பழத் தோலினால் நெற்றியில் தேய்ப்பது சிறந்த நிவாரணம் கொடுக்கும்.
காபியில் உள்ள காஃபின் தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும்.
டார்க் சாக்லேட்டிலும் காபின் நிறைந்துள்ளதால், ஒன்றை தலைவலிக்கு தீர்வைக் கொடுக்கும்.
ஒமேகா 3 கொழுப்புடன் மீன் உணவு ஒற்றை தலைவலியைக் கட்டுப்படுத்த மிகவும் உதவும்.
கிரீன் டீயில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டுகள் ஒன்றை தலைவலியை போக்கும்.
இஞ்சி டீ, புதினா டீ ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது ஒற்றைத் தலைவலியிலிருந்து நிவாரணம் அளிக்கும்
தயிரை உணவில் வழக்கமாக சேர்த்துக் கொள்வது, நீரிழப்பைக் கட்டுப்படுத்தி தலைவலி ஏற்படும் வாய்ப்பு பெரிதும் குறைக்கிறது.
மெக்னீசியம் நிறைந்த ஆளி விதைகள், சியா விதைகள், முந்திரி போன்றவை ஒற்றைத் தலைவலியைக் குறைக்க உதவுகிறது.