ஒமேகா -3 கொழுப்பு அமிலம் அல்லது மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
பருப்பு வகைகளில் அதிக புரதம் கொண்ட கருப்பு பீன்ஸ், கொண்டைக்கடலை மற்றும் ராஜ்மா சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.
பாலில் காணப்படும் கால்சியம் மற்றும் வைட்டமின் டி தசைகளை உருவாக்குவதற்கு அவசியம், இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது. இது வளர்சிதை மாற்றத்திலும் நேரடி விளைவைக் கொண்டுள்ளது.
ப்ரோக்கோலி நீர் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவாகும். இது எடை இழப்புக்கு அவசியமான வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது.
ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருப்பது மட்டுமின்றி ரத்தத்தில் உள்ள சர்க்கரையையும் கட்டுப்படுத்துகிறது.
பெர்ரி பழங்களில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது ஒட்டுமொத்த எடை இழப்பை ஊக்குவிக்கிறது.
பாதாமில் ஏராளமான கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் புரதம் உள்ளது, இது பசியைக் குறைக்கிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் கலோரிகளை வேகமாக எரிக்கிறது.