டீ குடிச்சே டயபடீஸை கட்டுப்படுத்தலாமா? ஆமாம் ஆனால் இந்த தேநீரை மட்டுமே குடிக்கனும்
அளவுடன் அறிவுறுத்தப்பட்டபடி குடித்தால், தேநீர் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்
தங்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள குடிக்கும் எனர்ஜி டானிக் தான் தேநீர்
உள்ளத்தையும், உடலையும் உற்சாகமாக வைக்கின்ற உற்சாக பானம்
இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுவதோடு, வகை 2 நீரிழிவு மற்றும் உடல் பருமனைத் தடுப்பதில் பங்கு வகிக்கக்கூடும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. காஃபின் இல்லாத கிரீன் டீயைத் தேர்ந்தெடுத்து குடிக்கவும்
இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்துவதுடன், உடலில் ஏற்படும் அழற்சி எதிர்வினைகளை குறைக்கும். கருப்பு தேநீர் கார்போஹைட்ரேட் உறிஞ்சுதலைக் குறைப்பதாகவும், அதனால் இரத்த குளுக்கோஸ் கட்டுப்பாடு மேம்படுவதாகவும் சில ஆய்வுகள் காட்டுகின்றன
சாமந்திப்பூவில் தயாரிக்கப்படும் காஃபின் இல்லாத கெமோமில் தேநீர், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
பாலிஃபீனால் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் மற்றும் கரிம அமிலங்கள் மற்றும் அந்தோசயினின்கள் கொண்ட செம்பருத்தி தேநீர் நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது
கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தில் ஈடுபடும் நொதிகள் மற்றும் இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதன் மூலம் உடலில் உள்ள கிளைசெமிக் கட்டுப்பாட்டை இஞ்சி பாதிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரத்த சர்க்கரையை மேம்படுத்த இஞ்சி மற்றும் சுக்குட் டீ உதவும்
புதினா கொண்டு தயாரிக்கப்படும் பெப்பர்மிண்ட் தேநீர், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது