ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமான பேரீச்சம் பழத்தில் இரும்புச்சத்து, கால்சியம், அமினோ அமிலம், பாஸ்பரஸ் மற்றும் விட்டமின்கள் நிறைந்துள்ளது.
பேரீச்சம் பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் பேரீச்சம்பழத்தின் ஊட்டச்சத்து மடங்கு இரட்டிப்பாகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
பேரீச்சம் பழத்தில் அதிக அளவு போட்டோஸ், குளுக்கோஸ் மற்றும் சூப்பரோஸ் உள்ளதால் உடனடி ஆற்றலை கொடுக்கிறது.
உடல் பலவீனமானவர்கள், ஒல்லியான உடல்வாகக் கொண்டவர்கள் பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் பலவீனம் நீங்கி, உடல் வலிமையாகும்.
கால்சியம், செலினியம், மெக்னீசியம், மாங்கனிசு, தாமிரச்சத்து ஆகியவை கொண்ட பேரீச்சம்பழம் எலும்புகளை வலுவாக்குகிறது.
நார் சத்துக்கள் நிறைந்த பேரீச்சம்பழம், செரிமான அமைப்பை வலுப்படுத்தி, மலச்சிக்கலை நீக்குகிறது.
முதுமையினால் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி, சருமத்தை இளமையாக வைக்க பேரீச்சம் பழம் உதவுகிறது.
பேரீச்சம்பழம் ஹீமோகுளோபினை அதிகரித்து ரத்த சோகையை நீக்குவதோடு, உடலுக்கு ஆற்றலை அள்ளி வழங்குகிறது.
ங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.