படிக்கட்டுகளில் ஏறுவது உங்கள் இதயத்திற்கு மிகவும் நல்ல உடற்பயிற்சி. மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை போக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும்.
தினமும் 7 நிமிடம் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினால், மாரடைப்பு ஏற்படும் அபாயம் வெகுவாகக் குறையும் என்கிறது ஓர் ஆய்வு.
படிக்கட்டுகளில் ஏறுவதை வழக்கமாக்கிக் கொண்டால், உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
தொடர்ந்து படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதை வழக்கமாக கொண்டால், உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும்.
தினமும் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதால், ஒருவரின் இறப்பு விகிதத்தை 33 சதவீதம் குறைக்கலாம் என்கிறது ஓர் ஆய்வு.
முதலில் 20- 25 படிக்கட்டுகளில் 5 தடவை ஏறி இறங்கலாம். பிறகு அதன் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்கவும்.
இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. இது பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.