நுரையீரல் இயற்கையில் பாதுகாக்க 7 ஆரோக்கிய வழிகள் !!
மனிதர் உயிர் வாழத் தண்ணீர் முக்கிய பங்காற்றுகிறது. அதிலும் நுரையீரல் ஆரோக்கியத்திற்குத் தண்ணீர் சிறப்புக் கவனம் செலுத்துகிறது.
தினமும் மூச்சுப்பயிற்சி செய்வதால் நுரையீரல் ஆரோக்கியமுடன் இருக்க உதவும்.
காலை, மாலை மற்றும் இரவு சாப்பிட்ட பின் சிறிது நேரம் நடப்பதால் நுரையீரல் ஆரோக்கியமுடன் இருக்க உதவுகிறது.
புரதம், நார்ச்சத்து, வைட்டமின் டி, கால்சியம், கார்போஹைட்ரேட் போன்றவை நுரையீரல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அவற்றில் சில சிட்ரஸ் பழங்கள், மஞ்சள், ப்ரோகோலி, பெரிஸ், கீரை வகைகள் மற்றும் ஆளி விதைகள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
நுரையீரலின் ஆரோக்கியத்திற்கு நிம்மதியான தூக்கம் மிக முக்கியம்.
தூசிகள், செல்லப்பிராணிகளின் தோல், முடிகள் மற்றும் துப்புரவுப் பொருட்களிலிருந்து வரும் இரசாயனப் புகைகள் அனைத்தும் காற்று மாசுபாட்டை ஏற்படுத்தி நுரையீரலுக்குத் தீங்கு விளைவிக்கும். வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிவதைக் கட்டாயப்படுத்தவும்
இஞ்சி மற்றும் மஞ்சள் போன்ற மூலிகைகள் எரிச்சலைக் கட்டுப்படுத்தும், வீக்கத்தைக் குறைக்கும் மற்றும் சளியை அகற்றவும். இருப்பினும் இந்த மூலிகைகள் நன்மைகளைக் கொண்டிருந்தாலும், இவற்றை மருத்துவச் சிகிச்சைக்கு மாறாகப் பயன்படுத்தப்படக்கூடாது.மூலிகை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு முன்பு சுகாதார நிபுணரை அணுக வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)