மூளை ஆரோக்கியம்

துரித கதியில் இயங்கும் இந்த வாழ்க்கையில், உடல் ஆரோக்கியமாக, பிட் ஆக இருக்க வேண்டும் என்பது போலவே மூளையும் மனமும் பிட் ஆக இருப்பதும் மிகவும் முக்கியம்.

Vidya Gopalakrishnan
Feb 17,2023
';

மூளை

எந்த வேலையையும் செய்ய உங்கள் உடலுக்கு கட்டளை கொடுப்பது உங்கள் மூளை தான். மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

';

ஆற்றல்

மூளைக்கு நிறைய ஆற்றல் தேவைப்படுகிறது. உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க அதற்கான உணவை உட்கொள்வது அவசியம்.

';

வாதுமை கொட்டை

பார்ப்பதற்கு மூளை போலவே தோற்றமளிக்கும் வாதுமை கொட்டை, உண்மையிலேயே மூளைக்கு சூப்பர்ஃபுட் ஆகும்.

';

வால்நட்

மூளைக்கு பல வழிகளில் பயனளிக்கும். வாதுமை கொட்டையில் ஆல்பா-லினோலெனிக் அமிலம் (தாவர அடிப்படையிலான ஒமேகா -3 கொழுப்பு அமிலம்), பாலிபினோலிக் கலவைகள் நிறைந்துள்ளது.

';

பாதாம்

மூளையில் அசிடைல்கொலின் அளவை அதிகரிக்க பாதாம் உதவுகிறது. அதில் காணப்படும் புரதங்கள் உருவாக்கும் நரம்பியக்கடத்தி இரசாயனம் மூளை சுறுப்பாக இயங்கவும், நினைவாற்றலை பெருக்கவும் உதவுகிறது.

';

பச்சை இலை காய்கறிகள்

அடர் பச்சை இலை காய்கறிகள் மூளைக்கு அதிக ஆற்றலை வழங்குகின்றன.

';

நினைவாற்றல்

கோலிக் அசிடைல்கோலின் அல்லது மெமரி ஸ்டெம் செல்களை, அதாவது நினைவுத் திறனுக்கான செல்களை உருவாக்க முட்டை உதவி நினைவாற்றலை மேம்படுத்துகிறது.

';

முட்டை

.முட்டையில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், லுடீன், கோலின் மற்றும் துத்தநாகம் குழந்தையின் மூளைத் திறனை அதிகரிக்கிறது.

';

மீன்

சால்மன், டுனா மற்றும் கானாங்கெளுத்தி போன்ற போன்ற மீன்களில் உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மூளை திசுக்களை உருவாக்க உதவுகிறது.

';

ஓட்ஸ்

ஓட்ஸில் உள்ள வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது.

';

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி, கீரை, வாழைப்பழம், மற்றும் இதர பச்சை நிற காய்கறிகள் புத்தி கூர்மையை மேம்படுத்த உதவும்.

';

புளுபெர்ரி

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன புளுபெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரி மூளையின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும்.

';

VIEW ALL

Read Next Story