கிலி காட்டும் சுகர் லெவலை சைலண்டா குறைக்கும் சூப்பர் காய்கள்

Sripriya Sambathkumar
Mar 02,2024
';

காய்கள்

பல வித உடல் கோளாறுகளை ஏற்படுத்தும் நீரிழிவு நோயை குணப்படுத்த பயன்படும் சில காய்கள் மற்றும் கீரை வகைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

பாகற்காய்

பல வித ஊட்டச்சத்துகள் நிறைந்த பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு அவசியமான காயாகும். இதை பொரியல், கூட்டு, குழம்பில் சேர்த்தோ, அரைத்து சாறாகவோ உட்கொள்ளலாம்.

';

முருங்கை இலை

ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த முருங்கை இலையை உணவில் சேர்த்துக்கொண்டால், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.

';

கீரை வகைகள்

வெந்தயக் கீரை, பாலக் கீரை போன்ற கீரை வகைகளில் நார்ச்சத்து அதிகமாகவும், கார்போஹைட்ரேட் குறைவாகவும் உள்ளது. சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு கீரையை உணவில் சேர்க்கலாம்.

';

ப்ரோக்கோலி

குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் அதிக நார்ச்சத்து உள்ள ப்ரோக்கோலி, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். இதில் பல வித ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

';

வெள்ளரிக்காய்

வெள்ளரியில் அதிக நீர்ச்சத்து, நார்ச்சத்து உள்ளது. இதில் கலோரிகளும் குறைவாக உள்ளன. இதை உட்கொள்வதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

';

பீன்ஸ்

வைட்டமின் சி, ஏ, நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ள பச்சை பீன்ஸை நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி உட்கொள்ளலாம்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story