மருத்துவர்களும், ஃபிட்னஸ் நிபுணர்களும் கிரீன் டீ குடிப்பதை ஊக்குவிக்கின்றனர்.
உடல் எடை குறைக்க, கொழுப்பை கரைக்க, தொப்பையை குறைக்க கிரீன் டீ பெரிதும் உதவுகிறது.
கிரீன் டீயில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. எடை குறைக்க உதவுகிறது.
கிரீன் டீயில் கேடசின் எனப்படும் பாலிபினால் வகை உள்ளது. இந்த கேடசின்கள் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆகும். இது தொப்பையை குறைக்க உதவும்.
காலை உணவு எடுத்து கொண்டு 1 மணி நேர கழித்து கிரீன் குடிக்கவும்.
மதிய உணவுக்கு 2 மணி நேரம் கழித்து கிரீன் டீ குடிக்கலாம்.
சாப்பிட்டு 10-15 நிமிடங்களுக்குப் பிறகு கிரீன் டீ குடித்தால், அது உணவை ஜீரணிக்க உதவும்.
உடல் நலத்தில் பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரிடம் அனுமதி கேட்ட பின்பு கிரீன் டீயை குடிப்பதை பற்றி யோசிக்கவும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இதுபோன்ற ஹெல்த் சம்பந்தமான கட்டுரைகளை படிக்க ஜீ தமிழ் நியூஸ் சேனலை லைக் செய்யவும்.