இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் பலரிடம் காணப்படும் நோயாக உருவெடுத்துள்ளது.
உலகளவில் நாளுக்கு நாள் அதிக மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
தவறான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறை இந்த நோய்க்கான முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.
இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் சில குறிப்பிட்ட உணவுகளை நாம் நமது டயட்டில் சேர்த்துக்கொள்வது மிக முக்கியமாகும்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் ஒரு சூப்பரான சூப் பற்றி இங்கே காணலாம்.
ப்ரோக்கோலி சூப் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மிக உதவியாக இருக்கும்.
ப்ரோக்கோலியில் குறைவான க்ளைசெமிக் குறியீடு உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.
ப்ரோகோலி சூப் தினமும் குடித்து வந்தால் உடலில் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.