கோடைக்காலத்தில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சில பானங்கள் பற்றி இங்கே காணலாம்.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பல வித ஆரோக்கிய நன்மைகள் கொண்ட சியா விதை பானம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
விளாம்பழம் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைப்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகின்றது.
குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ப்ரோபயாடிக்குகள் நீர் மோரில் அதிகமாக உள்ளன. இவை நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும்.
வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிகம் உள்ள நார்ச்சத்து மிக்க காய்கறிகளின் சாறு இரத்த சர்க்கரை அளவை குறைப்பதுடன் உடல் எடையை குறைக்கவும் உதவும். காய்களை வேகவைத்து அதன் சூப்பையும் குடிக்கலாம்.
இளநீரில் ஆண்டிஆக்சிடேண்டுகள் அதிகமாக உள்ளன. இது வெயிலில் உடலை குளிர்ச்சியாக வைக்கிறது. இதை சப்ஜா விதைகளுடன் சேர்த்து சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவை எளிதாக கட்டுப்படுத்தலாம்.
பல வித மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள கற்றாழை நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் நன்மை பயக்கும். வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற ஆண்டிஆக்சிடெண்டுகள் கற்றாழையில் உள்ளன.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.