கொலஸ்ட்ராலை கச்சிதமாய் கட்டுப்படுத்தும் உணவுகள்: சாப்பிட்டு பாருங்க

Sripriya Sambathkumar
Aug 24,2024
';

கொலஸ்ட்ரால்

எளிய, இயற்கையான வழிகளில் கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

பூண்டு

உணவில் பூண்டை சேர்த்துக்கொள்வது எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்கும். பூண்டில் உள்ள ஆரோக்கிய நன்மைகளால் பல வித உடல் உபாதைகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.

';

ஆப்பிள்

கெட்ட கொழுப்பு அதிகமாக உள்ளவர்கள் தினமும் ஆப்பிள் சாப்பிடலாம். இதன் மூலம் கொலஸ்ட்ரால் குறைவதுடன் செரிமானமும் சீராகும். ஆப்பிளில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது, இது குடலை சுத்தம் செய்ய உதவுகிறது.

';

ஓட்ஸ்

கெட்ட கொழுப்பை போக்க ஓட்ஸ் சிறந்த காலை உணவாக பார்க்கப்படுகின்றது. இதில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை அளிக்கின்றது.

';

முழு தானியங்கள்

கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளவர்கள் முழு தானியங்களை உட்கொள்ளலாம். கினோவா, கோதுமை, தினை போன்ற முழு தானியங்களில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவியாக இருக்கும்.

';

பெர்ரி

பெர்ரி வகை பழங்கள் கெட்ட கொழுப்பை குறைக்க உதவும். புளுபெர்ரி, ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெரி போன்றவை இதயத்திற்கு நல்லது. இவற்றில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளன.

';

பீன்ஸ்

பச்சை காய்கறிகளில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் பீன்ஸை உட்கொள்வது கொலஸ்ட்ராலை குறைக்க பெரிய அளவில் உதவும். இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story