நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவிலும், வாழ்க்கை முறையிலும் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
காலையில் சில பழக்கங்களை கடைபிடித்தால், நாள் முழுதும் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். அவற்றை பற்றி இங்கே காணலாம்.
இரவில் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து காலையில் அந்த வெந்தய நீரை குடிப்பது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்.
காலை உணவில் புரதச்சத்து நிறைந்த தயிர், பழங்கள், பச்சை காய்கறிகள் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள். இவை சுகர் நோயாளிகளுக்கு மிக நல்லது.
சியா விதைகளை இரவு முழுதும் தண்ணீரில் ஊற வைத்து விட்டு காலையில் இதை உட்கொள்ளலாம். நார்ச்சத்து அதிகம் உள்ள சியா விதைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.
காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் வெந்நீர் அல்லது வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி சுகர் அளவையும் கட்டுக்குள் வைக்கும்.
தினமும் காலையில் உடற்பயிற்சி, யோகா, நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை செய்வதாலும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.