யூரிக் அமில அளவு அதிகரிப்பதால் மூட்டு வலி, வலுவிழந்த எலும்புகள், சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த நமக்கு உதவும் இயற்கையான பானங்கள் பற்றி இங்கே காணலாம்.
கசப்பாக இருக்கும் பாகற்காய் சாறு யூரிக் அமில நோயாளிகளுக்கு பல நன்மைகளை செய்கிறது. இதை குடிப்பதால் யூரிக் அமில அளவு குறைவதோடு மூட்டு வலியும் குறைகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கும் நல்லது.
யூரிக் அமிலம் அதிகமாக உள்ளவர்கள் தினமும் ஆரஞ்சு சாறு குடிக்கலாம். இது யூரிக் அமில அளவை குறைப்பதோடு உடலுக்கு இன்னும் பல நன்மைகளையும் அளிக்கும்.
சுரைக்காய் சாறில் வைட்டமின் கே, வைட்டமின் ஈ மற்றும் இன்னும் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது யூரிக் அமில அளவையும், உடல் எடையையும் குறைக்கிறது.
யூரிக் அமில நோயாளிகள் நெல்லிக்காய் சாற்றையும் தினமும் குடிக்கலாம். இதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் உடலில் ஏற்படும் வலியையும் சரி செய்யும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.