இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் மக்களை அதிக அளவில் ஆட்கொள்ளும் ஒரு நோயாக உருவெடுத்து வருகிறது.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் சில இயற்கையான பானங்கள் பற்றி இங்கே காணலாம்.
வெந்தயத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவியாய் இருக்கின்றன.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கிலோய் மூலிகை தண்ணீர் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த பெரிதும் உதவுவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இலவங்கப்பட்டையில் உள்ள கிளைகோஜன் இரத்தத்தில் குளூக்கோஸ் அளவை சீராக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.
வேம்பு நீர் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி உடலுக்கு பிற ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றது.
பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு அத்தியாவசியமான காயாகும். இது சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.