காலையில் எழுந்தவுடன், வெதுவெதுப்பான நீரை குடிப்பது கலோரிகளை விரைவாக எரிக்கிறது. இதை குடிப்பதால் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றமும் மேம்பட்டு உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.
காலையில் வெறும் வயிற்றில் கிரீன் டீ, இலவங்கப்பட்டை டீ, சீரகம் டீ, ஓம தேநீர், சோம்பு டீ போன்ற மூலிகை தேநீர் வகைகளை உட்கொள்ளலாம். இதில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அது உடல் கொழுப்பைக் கரைக்க பெரிதும் உதவும்.
காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என அனைத்து வேளைகளிலும் புரதச்சத்து, மினரல்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை உள்ள சமச்சீரான உணவை உட்கொள்ள வேண்டும். இதன் மூலம் கெட்ட கொழுப்பு சேர்வதைத் தவிர்த்து தொப்பை கொழுப்பையும் குறைக்கலாம்.
உடலில் சேரும் கூடுதல் கலோரிகளை ஆரோக்கியமான வழிகளிலும், வேகமாகவும் குறைக்க, தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைக்க, தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது யோகா, நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, உடற்பயிற்சி என ஏதாவது ஒரு வகையான உடல் செயல்பாட்டில் ஈடுபட வேண்டும்.
உடல் எடையை குறைக்க புரதச்சத்து அவசியம். சப்பாத்தி, சாதம் ஆகியவற்றை குறைத்துக்கொண்டு, பருப்பு வகைகள், காய்கள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் சாப்பிட்டால் கலோரிகள் அதிகரிக்காமல் உடல் எடையையும் கட்டுக்குள் வைக்கலாம்.
எடை இழப்பு முயற்சியில் இரவு உணவு மிக முக்கியமானது. ஏழு மணிக்குள் இரவு உணவை உட்கொள்வது நல்லது. நேரம் கடந்து உணவு உட்கொண்டால் அது செரிமானம் ஆகாமல் உடலில் கொழுப்பு அதிகமாக காரணம் ஆகின்றது.
உடல் எடையை குறைக்க உறக்கம் மிக அவசியம். தினமும் குறைந்தது 7 மணி நேரமாவது தூங்குவது உடலை மீட்க உதவும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.