உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் மாரடைப்பு போன்ற பல அபாயகரமான நோய்கள் ஏற்படுகின்றன. இதை கட்டுக்குள் வைக்க வேண்டியது மிக அவசியம்
கொலஸ்ட்ராலை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும் சில பழங்கள் பற்றி இங்கே காணலாம்.
வாழைப்பழத்தை உட்கொள்வதால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். இதில் உள்ள பொடாஷியம் மற்றும் நார்ச்சத்து கெட்ட கொலஸ்ட்ராலை அகற்ற உதவுகின்றன.
ஆப்பிளில் உள்ள பெக்டின் எனப்படும் நார்ச்சத்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகின்றது. ஆப்பிள் உட்கொள்வது கொலஸ்ட்ராலை 50% குறைப்பதாக கூறப்படுகின்றது.
ஆரஞ்சில் உள்ள ஆண்டி ஆக்சிடெண்டுகள் மற்றும் வைட்டமின் சி கொழுப்பை குறைக்க உதவும். இது மாரடைப்புக்கான ஆபத்தையும் குறைக்கின்றது.
திராட்சையில் அதிக அளவில் ஆண்டி ஆக்சிடெண்டுகளும் நார்ச்சத்தும் உள்ளன. கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளவர்கள் இதை உட்கொள்ளலாம்.
அன்னாசிப்பழத்தில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகள் உள்ளன. இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.